நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா மகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார்.
எனவே அனிதா தனது தலை முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதனை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நெளஷாத் பெற்றுக்கொண்டார்.