Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“புற்றுநோயால் பாதித்த குழந்தைகளை முழுமையாக மீட்கலாம்”…. குழந்தைகள் நல டாக்டர் அறிவுறுத்தல்….!!!!

புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாட்டப்பட்டது. இதில் குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவுத் துறை தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கூறியதாவது, கொரோனா காலத்திற்குப் பிறகு குழந்தைகளை தாக்கும் புற்று நோய் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்த நிலையில் தமிழகத்தில் 75 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைகின்றார்கள். முதலில் பொதுமக்களுக்கு புற்று நோய் குணமாகும் என்ற நம்பிக்கை வர வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு முழுமையாக குணமடைய தீர்வு இருக்கின்றது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டாம். புற்றுநோய் தாக்கம் தெரிந்த பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆறு மாதம் சிகிச்சை பெற வேண்டும். மருந்துகள் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 60% பேர் சிகிச்சை பெறுகின்றார்கள் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |