இன்றைய நவீன உலகில் அனைவரும் தினந்தோறும் மிக விறுவிறுப்பாக ஒரு வேலையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். நமக்கு விருப்பமான செயல்களில் நம்மை ஈடுபடுத்தி வருகிறோம். இப்படிப்பட்ட நேரத்தில் நம்முடைய உடல் மற்றும் மனநலத்தில் அக்கறை காட்டுவது மிகவும் முக்கியம். உடல் நலத்தை காக்க வேண்டும் என கூறியவுடன் ஜிம்முக்குச் சென்று உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது என்பது மட்டும் அர்த்தம் இல்லை.
அதாவது நீங்கள் தினந்தோறும் பயன்படுத்தும், சுவாசிக்கும், தொடும் அல்லது உண்ணும் பொதுவான நச்சு தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்னும் விரிவாக சொல்ல வேண்டுமென்றால் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் பல மறைக்கப்பட்ட நச்சுகள் நம்மை சுற்றி இருக்கின்றன. அதிலிருந்து நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுவாக புற்றுநோய் என்பது நமது டி என் ஏவில் மரபணு மாற்றத்தின் விளைவாக கருதப்படுகிறது.
நம் உடம்பில் செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் வளர்ந்து பிளவு படுகிறது. அவை கட்டிகள் வடிவில் வளரத் தொடங்கும் போது இறுதியில் உடல் முழுவதும் பரவும் நேரத்தில் இந்த கொடிய நோய் பரம்பரை மரபணு மாற்றங்கள் காரணமாக பரவுகிறது. நம் வீடுகளில் பயன்படுத்தும் சில அன்றாட பொருள்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது புற்றுநோயுடன் இணைக்கப்பட்ட எட்டு விஷயங்கள் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
முதலில் காற்று மாசு காரணமாக நாம் சுவாசிக்கும் காற்றில் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்கள் இருப்பதால் காற்று மாசு அதிகாரப்பூர்வமாக புற்றுநோயை உண்டாக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக பல ஆய்வுகளின் படி இ-சிகரெட் பயன்படுத்துபவர்கள் சிகரெட் புகைப்பவர்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்வழி திசுக்களில் அதே மூலக்கூறு மாற்றங்களை எதிர்கொள்கிறார்கள். இசிகரெட்டுகள் புகையிலை சந்தைகளில் நுழையும் போது அவை புகைப்படத்திற்கு மிகவும் பாதுகாப்பான மாற்றாக கூறப்படுகின்றது. இருந்தாலும் இவற்றில் புகை மற்றும் தார் இல்லை என்றாலும் அவை நிகோடின் மற்றும் பிற சுவைகளை வெப்பப்படுத்துவதால் அவற்றை எடுத்துக் கொள்ளும் போது புற்றுநோயை உண்டாக்கும் பல பொருட்களை சுவாசிக்கிறார்கள்.
உலக சுகாதார அமைப்பின் படி ஹாம், பன்றி இறைச்சி மற்றும் சலாமி இறைச்சிகள் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் புற்றுநோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மறுபக்கம் மாட்டு இறைச்சி செம்மறி ஆட்டுக்குட்டி மற்றும் பன்றி இறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி 2ஏ புற்று நோயாக வகைப்படுத்தப்படுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடும்.
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் கேன்சரின் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் மிகவும் சூடான திரவங்களை குடிப்பதற்கும் உணவு குழாய் புற்றுநோயை உருவாக்கும் ஆபத்திற்கும் இடையில் வலுவான சான்றுகள் உள்ளன.ஒரு நாளைக்கு 700 மில்லி லிட்டர் மிகவும் சூடான தேனீர் குடிப்பதால் உணவு குழாய் புற்று நோய்க்கான வாய்ப்புகள் 90% அதிகரித்துள்ளது.
பாத்ரூமில் பிளாஸ்டிக் ஷவர் திரைசீலைகளில் நச்சுக்கள் மற்றும் கசிந்த புற்றுநோய் ரசாயனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிவிசி மற்றும் விஓசி கொண்ட பிளாஸ்டிக் ஷவர் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும் என்பதுதான்.
அடுத்ததாக மார்பகம் மற்றும் அடிவயிற்று பகுதியை சுற்றியுள்ள நிணநீர் மண்டலத்தை உள்ளாடைகள் கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது.உடலில் எங்கும் நச்சுக்கள் குவிவதால் புற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த ப்ராக்களை ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு மேலாக அணியும் பெண்கள் மார்பக புற்றுநோயின் அபாயத்தில் இருக்கின்றனர்.இருந்தாலும் இன்று வரை இந்த ஊகங்களை ஆதரிக்க போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
ஒருவரின் தோற்றத்தை புதுப்பிப்பதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிரந்தர முடி ரசாயனங்கள் மற்றும் ரசாயன முடி ஸ்ட்ரைட் ரைனர்கள் புற்றுநோயுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் கேன்சரில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி நிரந்தர முடி சாயம் அல்லது கெமிக்கல் ஸ்ட்ரைட் ரைனர்களை பயன்படுத்திய பெண்கள் மார்பக புற்றுநோயை உருவாகும் அபாயம் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இறுதியாக பல சகாப்தங்களில் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை வெகுவாக குறைப்பதன் காரணமாக ஒட்டுமொத்த மன அடுத்த நிலைகளில் விரைவான அதிகரிப்பு காணப்படுகிறது.நீண்டகால மன அழுத்தத்துடன் வாழ்வதால் புற்றுநோயை வளர்ப்பதற்கான அதிக ஆபத்து இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் ஊகித்துள்ளனர். மன அழுத்தம் உங்கள் உடலை புற்று நோய்க்கு விருந்தாக்கும்.
எனவே புற்றுநோயிலிருந்து விடுபட மேற்கண்ட 8 விஷயங்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொண்டால் மட்டுமே போதுமானது.