Categories
விளையாட்டு

புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் பீலே…. குணமடைய வேண்டி கண்ணீர் விடும் ரசிகர்கள்….!!!!

கால் பந்து விளையாட்டின் ஜாம்பவனாக கருதப்படும் பீலே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரேசில் மற்றும் கிளப் அணிகளான சாண்டோஸ், நியூயார்க் காஸ்மோஸ் அணிகளுக்காக ஸ்ட்ரைக்கராக விளையாடிய பீலே, காலத்தை கடந்த வீரராக உள்ளார். கடந்த 1958, 1962 மற்றும் 1970 போன்ற வருடங்களில் பிரேசில் உலகக்கோப்பையை வெல்ல பீலேவின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது ஆகும். 22 ஆண்டுகள் கால்பந்து விளையாடி 1282 கோல்களை பீலே அடித்துள்ளார்.

இதனிடையில் பீலேவின் உண்மையான பெயர் எட்சன் அராண்டஸ் டூ நசிமென்டோ ஆகும். பிரேசிலின் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார். இந்நிலையில் செப்டம்பர் 2021 முதல் புற்றுநோய் பாதிப்புக்கு பீலே சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதனால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கண்ணீர் மல்க வேண்டி வருகின்றனர்.

 

Categories

Tech |