Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

புற்றுநோய் வராமல் தடுக்க…” இந்த 8 மசாலாப் பொருளை பயன்படுத்துங்க”… ரொம்ப நல்லது…!!

உங்கள் வீட்டில் உள்ள மசாலா பொருட்களை வைத்து புற்றுநோய் வராமல் தடுக்க முடியும். அது என்னென்ன உணவுகள் என்பதை இதில் பார்ப்போம்.

புற்றுநோய் குறித்து ஏராளமான ஆய்வுகள் முடிவுகள், சிகிச்சைமுறைகள் வந்திருந்தாலும் புற்றுநோய் என்பது ஒரு உயிர்க்கொல்லி. இந்த நோயை போக்க நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவே சிறந்த மருந்து. புற்றுநோய் போன்ற உயிரை குடிக்கும் கொடிய நோய்களை உருவாக்கும் செல்களை அழிக்க கூடிய சக்தி நம் இந்திய பாரம்பரிய மசாலா பொருட்களுக்கு உள்ளது. அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய் புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்ட ஒரு மசாலா பொருள். அதிக அளவில் சிவப்பு மிளகாயை எடுத்துக்கொள்வது உடம்பிற்கு நல்லது. இது புற்றுநோய் செல்களை அழிக்கும்.

இஞ்சி

ஒரு எளிய மசால் மசாலா பொருள் என்றால் இஞ்சி. நம் உடலிலுள்ள கொழுப்பை குறைக்க, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க, புற்றுநோய் செல்களை கொல்வதற்கு சிறந்த மருந்து. எந்த உணவிலும் இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.

ஆர்கனோ

பீஸ்ஸா அல்லது பாஸ்தாவில் சேர்ப்பதை தவிர, இந்த ஆர்கனோ ஆனது, புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிரான ஒரு சாத்தியமான முகவராக பயன்படுகிறது. ஒரு டீஸ்பூன் ஆர்கனோ, இரண்டு சிவப்புத் திராட்சைக்கு நிகரான சக்தியைக் கொண்டது, புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக இது செயல்படுகிறது .இ

லவங்கப்பட்டை

புற்றுநோயை தவிர்ப்பதற்கு வெறும் அரை டீஸ்பூன் லவங்கப்பட்டை தூள் போதும். இது ஒரு இயற்கை மருந்து.  இதில் கால்சியம் அதிக அளவில் நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டால் புற்றுநோய் வராது.

சீரகம்

சீரகம் நம் செரிமானத்திற்கு மிகவும் உதவும் கூடிய ஒரு பொருள். கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் நமது வயிற்றில் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும். இது புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாக உள்ளது.

குங்குமப்பூ

குங்குமப்பூ இயற்கையில் கரோட்டினாய்டு அமிலம் உள்ளது. புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்து விளங்குகிறது. சில குங்குமப்பூ இலைகளை நீங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.

பெருஞ்சீரகம்

பெருஞ் சீரகம், சோம்பு என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது புற்றுநோய்க்கு காரணமாக இருக்கக்கூடிய உயிரினங்களின் பெருக்கத்தை நிறுத்துகிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

மஞ்சள்

புற்றுநோய் சம்பந்தமான நோய்களை கையாளும் போது மற்ற பொருட்களை விட மஞ்சள் தான் சிறந்தது. நம் உணவில் அழகிய வண்ணத்தை தரக்கூடிய இந்த பொருள் மார்பகப் புற்றுநோய், மூளைக்கட்டி அல்லது புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பல புற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மருத்துவ ரீதியாக இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

Categories

Tech |