உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோள் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவை இருக்கிறது. புற்றுநோய் என்பது ஆரம்ப காலகட்டங்களில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக புகையிலை பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது மற்றும் உடல் உழைப்பு இல்லாமல் போன்ற காரணங்களால் தான் புற்றுநோய் செல்கள் உருவாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் சுகாதாரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான சில வழிமுறைகள் இதோ,
புற்றுநோயை தடுப்பதற்கு உத்திரவாதமான முறை ஏதுமில்லை. ஆனால் சரியான வாழ்க்கை முறையின் மூலமாக நோய் ஏற்படும் வாய்ப்பை பெருமளவில் குறைக்க முடியும் . அதாவது,
- புகையிலை பொருட்களை பயன்படுத்தாமல் மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் ஒரு சேர இருப்பது தொண்டை புண்களின் வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- குறைந்த கொழுப்பு, அதிக காய்கறி பழம் முழுமையான தானியங்கள் உட்கொள்ளுதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்.
- உடல் பருமன் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாத்தல் மேலும் சூரியக்கதிர் தடுக்கும் களிம்பு பயன்படுத்துதல் மற்றும் இதற்கான தகுந்த உடை அணிதல்.
- சுத்தமான சூழலில் இருத்தல்.
- வைரஸ்களினால் ஏற்படும் குறிப்பிட்ட புற்று நோய்களை தடுப்பூசி மூலம் தடுக்கலாம்.