Categories
மாநில செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு! 6 மணி்நேரம் சிறுவன் செய்த செயல்…. உலக சாதனை புத்தகத்தில் கிடைத்த இடம்….!!!!.!!!

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுவன் கார்த்திக் தொடர்ந்து 6 மணி்நேரம் வாள்வீசி சாதனை படைத்தார்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த அழகர் சாமி-கீதா தம்பதியினரின் மகன் கார்த்திக்(14) ஆவார். இதில் கார்த்திக் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிலம்பம் கலையின வாள்வீச்சை தொடர்ந்து 6 மணிநேரம் சுற்றி 3 உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். முன்பாக துடியலூர் பகுதியிலுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அதிகாலையில் தன் சாதனையை துவங்கிய கார்த்திக் 6 மணி நேரம் வாள்வீசி சாதனை படைத்தார்.

இவ்வாறு சிறுவன் கார்த்திக்கின் இச்சாதனை இந்தியா உலகசாதனை, அமெரிக்கன் உலகசாதனை, மற்றும் யுரோப்பியன் உலகசாதனை என 3 புத்தகத்தில் இடம்பிடித்தது. இளைஞர்கள் மது, புகையிலை, கஞ்சா ஆகிய தீய செயல்களில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் 6 மணிநேரம் இடை விடாமல் ஒற்றை கைகளில் வால்வீசி உலக சாதனை படைத்த சிறுவன் கார்த்திக்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |