Categories
தேசிய செய்திகள்

புற்று நோயால் மரணமடைந்த தந்தை…. இறுதி சடங்கு செய்ய மகன்களுக்கு அனுமதி மறுப்பு …!!

புற்றுநோயால் இறந்த தந்தைக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் இறுதி சடங்கு செய்வதற்கு மகன்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் தியோகர் மாவட்டத்தில் பிரேமானந்தா சாஹூ வசித்து வருகிறார் அவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். அவர் அங்கு இருக்கின்ற ஒரு திரையரங்கில் வேலை செய்துகொண்டிருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்கு மூடப்பட்டதால், வேலையை இழந்த பிரேமானந்தா சாஹூ, தனது இரண்டு மகன்களையும் சொந்த கிராமத்துக்கு அனுப்பிவிட்டு திரையரங்கிற்கு அருகே உணவு தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். அவரும் அவரின் மனைவியும் திரையரங்குக்கு அருகிலேயே சிறிய குடிசை அமைத்து அங்கு தங்கியுள்ளனர்.

இத்தகைய நிலையிலும் பிரம்மானந்தா சாஹூக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அப்பகுதியில் இருக்கின்ற அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று பரவியதால், புற்றுநோயாளிகள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.இச்சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் பிரேமானந்தா மீண்டும் தனது குடிசைக்கு திரும்பியுள்ளார். அவர் வேலை செய்து வந்த திரையரங்கு உரிமையாளர் மற்றும் சில தன்னார்வலர்கள் அவரின் சிகிச்சைக்காக பல்வேறு உதவிகள் செய்துள்ளனர். இருந்து சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதனை அறிந்த அவரது இரண்டு மகன்களும் உடனடியாக தியோகர் மாவட்டத்திற்கு வந்தனர். ஆயினும், பிரேமானந்தா சாஹூக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தால் அவரின் இரண்டு மகன்களையும் இறுதி சடங்கு செய்வதற்கு அனுமதி அளிக்கவில்லை. இத்தகைய நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் ஒன்றிணைந்து பிரேமானந்தா சாஹூயின் உடலை அடக்கம் செய்தனர்.

Categories

Tech |