புற்றுநோயை எதிர்த்துப் போராட அடுத்த கட்டத்திற்கு தயாராகி விட்டேன் என ட்விட்டர் பக்கத்தில் ஹம்சா நந்தினி பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு நடிகையான ஹம்சா நந்தினி ஒகடவுடாம் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது திரைப்படத்தை தொடங்கியுள்ளார். 786 கைதியின் பிரேம கதா, மோகின போன்ற தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என மொத்தம் 26க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற நான் ஈ திரைப்படத்திலும் ருத்ரமாதேவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சமீப காலமாக மார்பக புற்று நோயால் பாதித்து வருவதாகவும் தற்போது மொட்டைத் தலையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு பகிர்ந்துள்ளார். அதில் “இதுவரை 16 கீமோ சிகிச்சை செய்து இருக்கிறேன். இருந்த போதும் புற்று நோயிலிருந்து விடுபட முடியவில்லை. புற்றுநோயை எதிர்த்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி விட்டேன் எனவும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
ஹம்சா நந்தினி இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலர் கண் கலங்கிய நிலையில் நீங்கள் நிச்சயம் இதில் இருந்து விடுபடுவீர்கள். இறைவனை வேண்டிக்கொள்கிறோம் எனவும், புற்றுநோயை போராடி வென்று மறுபடியும் நடிக்க வருவீர்கள்” எனவும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.