மதிமுக சார்பில் நேற்று மாமன்னர் திருமலை நாயக்கர் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நாயக்கருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைமைக்கழக செயலாளர் துரை வைகோ, தென் தமிழகம் முழுவதும் தைப்பூச நாயகனான மன்னர் திருமலைநாயக்கரின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என்று பேசினார்.
பின்னர் மத நல்லிணக்கத்திற்கு வித்திட்ட திருமலை நாயக்கர் மன்னர் கிறிஸ்தவர்கள் தேவாலயம் கட்டுவதற்கும் இஸ்லாமியர்கள் மசூதிகள் கட்டுவதற்கும் பொருளுதவியையும் நிலங்களையும் வாரி வழங்கியவர். அதே போல் மதுரையில் வாழும் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சனையையும், மக்களின் தண்ணீர் பிரச்சனையையும் தீர்ப்பதற்காக நீர்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்.
மேலும் திருமலை நாயக்கர் மன்னர் தான் மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை ராணி மங்கம்மாள் சாலை உருவாக காரணம் என்று கூறினார். இவ்வாறு புதிய வரலாறு குறித்த தகவல்களை பேசிய துரை வைகோவை கண்டு வாயடைத்து நின்ற தொண்டர்கள் அதுசரி… புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? என்று வாயாற புகழ்ந்தனர்.