Categories
மாநில செய்திகள்

புலியூர் பேரூராட்சிக்கான தலைவர் பதவி…. மீண்டும் தேர்தல் ஒத்திவைப்பு…. வெளியான தகவல்…..!!!!!

கரூர் மாவட்டத்திலுள்ள புலியூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் இருக்கிறது. இவற்றில் திமுக கூட்டணி 13 வார்டுகள், சுயேட்சை 1 வார்டு, பிஜேபி 1 வார்டு வெற்றி பெற்றது. இதில் புலியூர் பேரூராட்சித் தலைவர் பதவியானது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. சென்ற முறை நடைபெற்ற தலைவருக்கான மறைமுகத் தேர்தலில் திமுக உறுப்பினர் புவனேஸ்வரி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அதுமட்டுமல்லாமல் போட்டி இன்றித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளில் திமுக உறுப்பினர்கள் பொறுப்பேற்று இருந்தனர். இதனால் அதிரடி நடவடிக்கை எடுத்து கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொறுப்பேற்றுள்ள திமுக உறுப்பினர்கள் ஏற்றுள்ள பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அதன்பின் 08/03/2022 புலியூர் பேரூராட்சித் தலைவராக பொறுப்பேற்று இருந்த திமுக உறுப்பினர் புவனேஸ்வரி தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். அதனை தொடர்ந்து இன்று புலியூர் பேரூராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் 9.30 மணியளவில் தொடங்கியது.

அவ்வாறு தேர்தல் நடைபெறும் குறிப்பிட்ட நேரத்திற்கு தலைவர் பதவிக்கு போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி, துணைத்தலைவர் அம்மையப்பன், பாஜக வார்டு உறுப்பினர் விஜயகுமார் போன்ற 3 நபர்கள் மட்டுமே வந்தனர். ஆகவே பெரும்பான்மையான உறுப்பினர்கள் சரியான நேரத்திற்கு வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே 11 திமுக உறுப்பினர்கள் மற்றும் சுயேச்சை உறுப்பினர் ஒருவர் தேர்தலை புறக்கணிப்பு செய்ததால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கு பேரூராட்சி துணைத் தலைவர் அம்மையப்பன் தடையாக உள்ளதாகவும், இது தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என்றும் வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கலாராணி குற்றச்சாட்டை முன் வைத்தார்.

Categories

Tech |