நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்காக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளன.
மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் புலியை சுட்டு பிடிக்கவேண்டும் என்று பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . பின்னர் புலியை சுட்டு பிடிக்க உத்தரவு ஆணையை காண்பித்த பிறகு மக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில், புலியை சுட்டுக் கொல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மக்களின் உயிர் முக்கியம் தான் ஆனால் புலியை கொல்வது அதற்கு தீர்வு அல்ல. அதனால் அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் அந்த T3 புலியை பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.