சிமெண்டு சிலாப் இடிந்து விழுந்து உயிரிழந்த வாலிபர் புலி தாக்கியதால் தான் இறந்தார் என வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி மற்றும் கூடலூர் பகுதிகளில் 2 பேரை அடித்துக் கொன்றுவிட்டது. இதனால் புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கீழ்நாடுகாணி பகுதியில் வசித்த ராஜபாண்டியன் என்பவர் புலி தாக்கி உயிரிழந்ததாக தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய விசாரணையில் சிமெண்டு சிலாப் இடிந்து விழுந்து ராஜபாண்டியன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
அதன்பிறகு காவல்துறையினர் ராஜபாண்டியனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து வனவிலங்கு தாக்கியதற்கான எந்த அடையாளங்களும் ராஜபாண்டியனின் உடலில் இல்லை என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால் புலி தாக்கியதால் தான் ராஜபாண்டியன் இறந்ததாக தகவல் பரவியுள்ளது. இவ்வாறு வதந்தி பரப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.