நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இயக்குனர் லிங்குசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் பற்றி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஜனவரியில் கட்சி துவக்கம். டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாவது நிச்சயம். அற்புதம்… அதிசயம்… நிகழும்…” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் லிங்குசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புலி வருது புலி வருதுன்னு சொன்னாங்க ஆனா இப்போ சிங்கமே வந்துருச்சு” என்று கூறி ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இப்போ இல்லை என்றால் எப்பவும் இல்ல என்டர் ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார்.