Categories
தேசிய செய்திகள்

புல்டோசர் முன்னாடி சைக்கிள் நிற்க முடியாது…. ஹேமமாலினி அதிரடி பேச்சு…..!!!!!!

பா.ஜ.க. எம்.பி-யான ஹேமமாலினி செய்தியாளர்களிடம் நேற்று பேசியபோது, ​​உத்தரபிரதேசத்தில் எங்களுடைய அரசு மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்று எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஒவ்வொரு வளர்ச்சிக்கான விஷயங்களிலும் நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். உத்தரபிரதேசத்தில் யோகி ஆட்சியில், கிரிமினல்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டிடங்களை புல்டோசர்களை கொண்டு வந்து அதிகாரிகள் இடித்து தள்ளி விட்டனர்.

இதற்கிடையில் சைக்கிளைதேர்தலின் சின்னமாக கொண்ட சமாஜ்வாதி தலைவரான அகிலேஷ் கூட முன்பு, புல்டோசர் பாபா என்று யோகியை அழைத்து உள்ளார். இது தொடர்பாக தேர்தல் கூட்டம் ஒன்றில் யோகி பேசியபோதுகூட, விரைவுசாலை அமைக்க பயன்படும் புல்டோசர், மாபியா (குற்றவாளிகள் கொண்ட கும்பலை) அழிக்கவும் சிறந்த ஒன்றாக இருக்கிறது என கூறியுள்ளார்.

Categories

Tech |