நடிகர் அஜித் புல்லட் பைக் மேல் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து வருகிற மே 1 அஜித் பிறந்தநாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில் அஜித்தின் பழைய போட்டோ ஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருப்பதி. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன் நடந்த போட்டோ ஷுட்டில் நடிகர் அஜித் புல்லட் பைக் மேல் கால்மேல் கால் போட்டு செம ஸ்டைலாக அமர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் அஜித் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.