Categories
இராணுவம் தேசிய செய்திகள்

புல்வாமாவில் நடந்த துப்பாக்கிச்சூடு..!! பயங்கரவாதி சுட்டுக்கொலை…

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்ததில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டம், கம்ராசிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து இன்று அதிகாலை கம்ராசிபோரா கிராமத்துக்கு விரைந்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நிகழ்ந்தது. அதில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |