புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு இருந்ததாக அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி புல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் இந்திய வீரர்கள் 40 பேர் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் பாலக்கோட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாம் மீது இந்தியா தாக்குதலை மேற்கொண்டது. அதற்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்க முயற்சித்த போது இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் விமானத்தை தகர்க்க முயற்சி செய்தார். அப்போது அவரது விமானம் விபத்து ஏற்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் அபிநந்தனை கைது செய்தனர்.
அதன்பிறகு இந்திய அரசின் விடாமுயற்சியினால் அபிநந்தன் விடுவிக்கப்பட்டார். அவர் விடுவிக்கப்படாவிட்டால் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தும் என்று கை கால்கள் நடுங்கி அச்சத்தில் அவரை பாகிஸ்தான் விடுதலை செய்தது என்று அந்நாட்டு எம்பி கூறியிருந்தார். இந்நிலையில் இம்ரான்கானின் அமைச்சரவையில் இருக்கும் சவுத்ரி என்ற அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில் புல்வாமாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் நேரடியாக பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்தது உண்மை என்ற வகையில் அவர் பேசினார்.
புல்வாமா பகுதியில் தாக்குதல் மேற்கொண்டது அதற்கான சதித் திட்டம் போட்டது என இரண்டிலும் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாக அவர் கூறினார். இதுபற்றி அவர் கூறுகையில் “இந்தியாவை அவர்களின் இடத்திற்கு சென்று தாக்கினோம். இது இம்ரான்கான் தலைமையில் நாம் அடைந்த மிகப்பெரிய வெற்றி. இதில் அனைத்து தரப்பினருக்கும் பங்கு உண்டு” எனக் கூறியுள்ளார்.