Categories
உலக செய்திகள்

“புல்வாமா தாக்குதல்”… என்ஐஏ விசாரணையை முடுக்கிவிட்ட புகைப்பட ஆதாரங்கள்…!!

புல்வாமா தாக்குதலில் பிடிபட்ட பரூக் என்ற இளைஞர் வைத்திருந்த புகைப்படங்கள் என் ஐ ஏ விசாரணைக்கு உதவியாக இருந்துள்ளது.

நாடு முழுவதும் பெரும் அளவில் பேசப்பட்ட புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதிகளில் ஒருவனான பரூக் என்பவன், பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் வழியில் எடுத்த ஏராளமான புகைப்படங்கள், வீடியோக்கள், செல்போன் பதிவுகள் , குண்டு தயாரிப்பது குறித்து அவன் எடுத்த படங்கள் போன்றவற்றை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் ஜெய்ஷே முகம்மதின் முக்கிய தீவிரவாதிகளுடன் வாட்ஸ்ஆப்பில் அவன் பேசிய பதிவுகளும் விசாரணைக்கு மிக உதவியாக இருந்தன. காஷ்மீரை சேர்ந்த ஷக்கீர் பஷீர் மேக்ரே என்ற இளைஞரின் புகைப்படம் பரூக்கின் மொபைலில் பதிவாகி இருந்தது. இந்தப் புகைப்படம் கிடைத்தது என்ஐஏ அதிகாரிகளுக்கு ஜாக்பாட் அடித்ததை போல மாறி, விசாரணையை சுலபமாகவும், துரிதமாகவும் நடத்த உதவியது. புல்வாமாவை சேர்ந்த பரூக் என்ற நபர் சிஆர்பிஎப் வாகன அணிவகுப்பு குறித்த தகவலை தீவிரவாதிகளுக்கு ரகசியமாக கூறியதாக சென்ற பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |