Categories
மதுரை மாவட்ட செய்திகள்

புளியம்பழம் பறித்த முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மரத்திலிருந்து கீழே விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள வி.அம்மாபட்டி கிராமத்தில் செல்லன்(60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிளாங்குளம் ஊருணி கரையில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எதிர்பாராதவிதமாக செல்லன் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார்.

இதை பார்த்த பொதுமக்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |