புள்ளிங்கோ சிகை அலங்காரம் ஆனது இப்பொழுது வேலூரிலும் பரவலாகி வருகின்றது . மாடர்னாக பார்க்கப்படும் இந்த அலங்காரம் வினோதமாகவும் ஒழுங்கற்ற தன்மையாகவும் காட்சி அளிக்கிறது. அதனால் இதுபோன்ற ஹேர் ஸ்டைல்க்கு வேலூரில் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மாணவர்களும் மார்டனாக முடிவெட்டிக் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லுகின்றனர். வேலூரில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த புள்ளிங்கோ கட்டிங் செய்து பள்ளிக்கு செல்கின்றனர். கடந்த 5 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இது போன்ற சிகை அலங்காரம் செய்து கொண்டு மாணவர்கள் வலம் வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிகளும் திறந்தது. அதனால் அதே சிகை அலங்காரத்தோடு மாணவர்கள் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். இதனைக்கண்ட தலைமையாசிரியர் அவர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய முடிவு செய்து இன்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் இரண்டு பேரை அழைத்து வந்தனர். அதன்பின் அவர்களின் மூலம் புள்ளிங்கோ கட்டிங் செய்து இருந்த மாணவர்கள் அனைவரையும் வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்து சிகை அலங்காரம் சீரமைக்கப்பட்டன.
அந்த பள்ளியில 11 மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இன்று முடிவெட்டி சீரமைக்கப்பட்டன இதனைத் தொடர்ந்து நாளை ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் புள்ளிங்கோ கட்டிங் செய்து இருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நாளை முடிவு வெட்டப்படும் என்று தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மாணவர்களின் புள்ளிங்கோ கட்டிங்கை ஒழுக்கம் அற்றவையாக பார்ப்பதால் வேலூரில் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களுக்கு மாடர்னாக முடி வெட்டக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.