புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த நான்கு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரை அடுத்துள்ள சுஜ்ஜல்குட்டையில் மான் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுஜ்ஜல் குட்டை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி இறைச்சியை ஒரு கும்பல் சமைத்து கொண்டிருப்பதை பார்த்து வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
இது குறித்து விசாரிக்கையில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த சார்லஸ்(38), சூரியபிரகாஷ்(20), ராமர்(35), அருள்குமார்(18) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். பின்னர் நான்கு பேருக்கும் தலா ரூ.30 ஆயிரம் என 1,20,000 அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தொகையை கட்டிய பின்னரே நான்கு பேரும் விடுவிக்கப்பட்டனர்.