Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

புள்ளி மானை வேட்டையாடி தூக்கிச்சென்ற புலி… அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

முதுமலையில் புள்ளி மானை வேட்டையாடி புலி தூக்கிச் சென்றதை பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் காட்டு யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய், மான் உட்பட ஏராளமான வனவிலங்குகள் இருக்கின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் இரையைத் தேடி சாலையோரத்தில் நடமாடி வருகின்றது.

இப்படி சாலை ஓரத்திற்கு வருகின்ற வனவிலங்குகளை வேட்டையாட புலி, சிறுத்தை புலிகள் வருகின்றது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு இறையை வேட்டையாட சாலை ஓரத்தில் ஒரு புலி படுத்துக் கிடந்ததைப் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்துள்ளனர். இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு பகுதியில் வன அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் வனத்துறை உதவியுடன் வனப்பகுதிக்கு சென்று பார்த்தனர்.

அதில் சாலையோரத்தில் மான்கள் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென்று அங்கு வந்த ஒரு புலி, புள்ளி மானை  வேட்டையாடி அதைத் தூக்கிக்கொண்டு புதருக்குள் சென்று விட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை செல்போனில் புகைப்படமும், வீடியோவும், எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சுற்றுலா பயணிகள் கூறியது, புலியை கூண்டுக்குள் அடைத்து வைத்திருக்கும் போதும் பயமாகத்தான் இருக்கிறது. அதே போல இரையை  வேட்டையாடி புள்ளிமானை தூக்கி சென்றதை பார்க்கும்போதும் பயமாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்தனர்.

Categories

Tech |