Categories
உலக செய்திகள்

புள்ளி விவரங்கள் படி ஆபத்து குறைவு தான்…. இவர்களுக்காக இதனைத் திறக்கலாம்…. ட்ரம்ப் வேண்டுகோள்…!!

புள்ளிவிவரங்களின்படி குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவது குறைவு என்பதால் பள்ளிகள் திறக்கப்பட லாம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் வைத்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நாட்டில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் தன் மகன் பாரோன் மற்றும் பேரக் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில் எனக்கு எத்தகைய பிரச்சனையும் இல்லை என கூறியுள்ளார். தற்போது நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் பேசியபோது, பள்ளிகளில் கொரோனாதொற்று பரவுவதற்கான ஆபத்தினை பற்றிய கவலைகளை ஒப்புக்கொண்ட நிலையில், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்து மிகவும் குறைவாகவே இருக்கும்.அதனால் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறினார்.

இதனைத் தொடர்ந்து மக்கள் அனைவரும் சமூகரீதியாக விலகி இருந்தும் தங்களின் கைகளை சுத்தமாக கழுவியும் தொற்று நோயிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்திருக்கின்றார்.

Categories

Tech |