Categories
சினிமா தமிழ் சினிமா

புள்ளைங்கோ வேர லெவல் … ‘மாஸ்டர் தியேட்டரில்தான் வெளியாகனும்’ … இந்திய அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!!

மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய அளவில் ஹேஷ்டேக் ஒன்றை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் திரையுலக பிரபல நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது என தகவல் பரவி வருகிறது. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில்தான் வெளியாக வேண்டும் என விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #MasterOnlyOnTheaters என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர். கொரோனா தொற்று அபாயத்தால் கடந்த மார்ச் 25ஆம் தேதி தியேட்டர்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இணைய வசதி மூலம் வீட்டிலிருந்தே திரைப்படங்களை பார்த்து கொள்ளும் வசதியை ஓடிடி தளங்கள் கொடுத்துள்ளன. பல வசதிகள் கொடுத்திருந்தாலும் பிடித்த நடிகரின் படத்தை கூட்டமாக சென்று ஆட்டம் பாட்டம் என விசிலடித்து கைதட்டி கொண்டாடி தியேட்டரில் பார்ப்பதில்தான் உற்சாகமளிப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இதையடுத்து தற்போது மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் பரவுகிறது. மாஸ்டர் திரைப்படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டுமென ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியளித்தது. இதையடுத்து விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் உறுதியாக தியேட்டரில்தான் பொங்கலுக்கு வெளியாகிறது. இதன்பின்தான் ஓடிடி தளத்தில் வெளியாகயிருக்கிறது . ஆனால் அது நெட்ப்ளிக்ஸில் அல்ல அமேசான் பிரைமில் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து  மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் தியேட்டரில் ஆரவாரத்துடன் கண்டுகளிக்க முடியும் என தெரிகிறது.

Categories

Tech |