தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதால் இன்னும் ஐந்து நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்திய மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது. இருந்தாலும் சில இடங்களில் வெள்ளம் காரணமாக விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அணைகளில் நீர் நம்புவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் புழல் ஏரியில் இருந்து காலை பதினோரு மணிக்கு உபரி நீர் திறக்கபடுவதாக பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரி திறக்கப்படும் என அறிவித்துள்ளது. நாரவாரிகுப்பம், தண்டல்கழனி, வடபெரும்பாக்கம்,மஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.புழல் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் ஒரு பகுதி வழியாகச் சென்று கடலில் கலக்கும். காலை 6 மணி நிலவரப்படி புழல் ஏரிக்கு நீர்வரத்து 1487 கன அடியாக உள்ளது. மொத்தம் 21.20 அடி நீர்மட்டம் கொண்ட புழல் ஏரியில் தற்போது 19.30 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது.