பெருங்களத்தூர் -புழல் சாலையில் மின்விளக்கு அமைக்கக் கோரி லாரி உரிமையாளர்கள், பொதுநல அமைப்புகள் போராடி வந்தன. இந்த நிலையில் இந்த புறவழிச்சாலையில் மின்கம்பங்கள் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது. அதற்கான டெண்டர் இன்று கோரப்பட்டுள்ளது. ரூ.23 கோடி செலவில் புற வழிச்சாலையின் இருபுறமும் மின்விளக்கு கம்பங்கள் அமைப்பதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது.
இரட்டை கை மின்விளக்கு கம்பம் 1033-ம், ஒற்றைபொறுத்துவதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளதுக்கை மின்விளக்கு கம்பம் 1096-ம் தயாரித்து . 10 மீட்டர் உயரத்தில் மொத்தம் 2133 மின்கம்பங்கள் அமைக்க வேண்டும். டெண்டர் இறுதி செய்யப்பட்ட பின்னர் பணி அடுத்த மாதம் செப்டம்பரில் தொடங்கி அக்டோபர் மாதம் இறுதியில் முடிக்கப்படும் என்று தேசிய நெடுஞ் சாலை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.