கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பேரூராட்சி 4-ஆவது வார்டு திருவள்ளுர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச் சாவடி எண் 4-ல் இன்று (பிப்.24) மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புவனகிரி பேரூராட்சியில் பதிவான வாக்குகளை எண்ணும் போது 4-வது வார்டில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் திடீரென பழுதானது. இதனால் 4-வது வார்டுக்கான எண்ணிக்கை நிறுத்தப்பட்டு தற்போது மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.