புவிசார் குறியீடு பெற்ற பவானி ஜமுக்காளம், ஈத்தாமொழி நெட்டை தென்னை, தோடா மக்களின் கைவண்ண வேலைப்பாடு மற்றும் பத்தமடை பாய் ஆகிய பாரம்பரிய பொருட்களுக்கு அஞ்சல் உறை வழங்கி அஞ்சல் துறை கௌரவித்துள்ளது. இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா@75 திட்டத்தை நினைவு கூறும் வகையில் மற்றும் ஆத்மநிர்பர் பாரத் அங்கீகாரத்தின் அடையாளமாகவும், தமிழ்நாடு புவிசார் குறியீடு தயாரிப்புகளின் 3 சிறப்பு அஞ்சல் உறைகளான பவானி ஜமுக்காளம், தோடா எம்பிராய்டரி, ஆரணி பட்டு போன்றவைகளுக்கு அஞ்சல் உறை வழங்கப்பட்டுள்ளது.
இது டாக்டர் K.மணிவாசன், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, திரு.T.P. ராஜேஷ்,இஆப, மேலாண்மை இயக்குனர், கோ ஆப்டெக்ஸ், திருமதி P. காந்திமதி, பொது மேலாளர் (நிர்வாகம்), TAHDCO மற்றும் திரு.B.செல்வகுமார், தமிழ்நாடு வட்டத்தின் முதன்மை அஞ்சல் துறை தலைவர் முன்னிலையில் நேற்று முன்தினம் முதன்மை அஞ்சல் துறை தலைவர் அலுவலகத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தால் வெளியிடபட்டது என்று குறிப்பிட்டுள்ளது.