சூரிய குடும்பத்திலேயே மிகச்சிறிய கிரகமாக அறியப்படும் புதன் கிரகத்திலும் புவியைப் போன்று புவிகாந்த புயல் வீசும் என்பதனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் வாயிலாக இதரகிரகங்களிலும் சூரியக் குடும்பத்தைத் தாண்டி இருக்கும் மற்ற கிரகங்களிலும் கூட புவிகாந்த புயல் வீசக் கூடும் என்பதும், காந்த மண்டலத்தின் அளவு மற்றும் புவியைப் போன்று அயனி மண்டலங்களின் அடிப்படையில் அது நிகழ்வதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆய்வில் புதன் கிரகத்துக்கு ஒரு வளைய மின்னோட்டம் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Categories