புவியை நோக்கி வருகிற குறுங்கோள்களை கண்டுபிடித்து தாக்கி அழிக்கும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பினை உருவாக்கி வருவதாக சீன விண்வெளி ஆய்வு மையமானது தெரிவித்து இருக்கிறது. மேலும் புவியையும், மனித இனத்தையும் காக்கும் முதன்மையானதாக இந்த அமைப்பு இருக்கும் என்று சீன விண்வெளி அமைப்பின் துணைத்தலைவர் ஊ யான்குவா தெரிவித்திருக்கிறார்.
புவிக்கு அச்சுறுத்தலாக 2025 ஆம் வருடம் அதை நெருங்கும் குறுங்கோளை இடைமறித்து தாக்குவது தான் முதல் இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறுங்கோளின் வேகம், தொலைவு, அது புவியை நெருங்கும் நேரம் போன்றவற்றை கண்டறிந்து அதனைத் தாக்குவதற்கான வாய்ப்பு, ஒத்திகை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மென்பொருளையும் இந்த அமைப்பு கொண்டிருப்பது இதன் சிறப்புக் கூறாகும்.