அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தின் பொது ட்ரம்ப் இந்தியாவை குற்றம் சுமத்தி விவாதம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற 90 நிமிட தேர்தல் விவாதம் நடைபெற்றது. அதில் ட்ரம்ப் மற்றும் பிடன் கடுமையான விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். கொரோனா பதிப்பின் விவரம் பற்றிய விவாதத்தின் போது உலகில் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் அமெரிக்கா பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து புள்ளிவிவரங்களை அந்நாடு பகிர்ந்து கொள்ளவில்லை என இந்தியாவை குற்றம்சாட்டியுள்ளார். இந்தியா கொரோனா இழப்புகளை சரியாகக் கொடுக்கவில்லை என்று விவாத நடுவர் கிறிஸ் வாலஸிடம் ட்ரம்ப் பிடன் முன்னிலையில் கூறியுள்ளார். காலநிலை மாற்றத்தை நோக்கி விவாதம் போன போது பிடன் தான் அதிபரானால் விவேகமான முறையில் அமெரிக்க பணத்தை பயன்படுத்துவதில்லை. காலநிலை மாற்றம் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைந்து விடுவேன் என மக்களுக்கு உறுதி கூறியுள்ளார்.
எதுவாயினும் காலநிலை மாற்றத்தில் அமெரிக்காவின் பங்களிப்பை கொண்டு உலகில் புவி வெப்பமடைதலுக்கு 15% அமெரிக்கா பொறுப்பு எனக் கூறினார். ஆனால் அதற்கு எதிராக விவாதித்த ட்ரம்ப் மற்ற நாடுகளில் இந்தியாதான் அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம் என்று குற்றம் சுமத்தினார். சீனா மாசுக்களை காற்றில் பரப்புகிறது, இந்தியாவும் ரஷ்யாவும் அதை செய்கிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஆனால் நட்பு நாடாக நம்பிய இந்தியா பற்றி பிடன் தளர்வான கருத்துக்களை மட்டுமே வெளியீட்டு தெளிவாக இருந்துள்ளார்.