Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ திரைப்படத்தை பார்வையிட்ட கமல்ஹாசன்!…. யாருடன் இணைந்து பார்த்தார் தெரியுமா…?!!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் அண்மையில் வெளியான “புஷ்பா” திரைப்படம் உலகம் முழுவதும் பல மொழிகளில் வெளியாகி ரூ.300 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது. மேலும் இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் புஷ்பா படத்தை பாராட்டி வருகின்றனர்.

புஷ்பா படத்தின் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ ப்ரசாத், அந்த படத்தில் ஓ சொல்றியா, ஐயா சாமி போன்ற பாடல்கள் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கமல் ஹாசனுடன் இணைந்து ‘புஷ்பா’ படத்தை பார்த்ததால் தேவி ஸ்ரீ ப்ரசாத் தற்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் தேவி ஸ்ரீ ப்ரசாத் கூறியுள்ளார்.

Categories

Tech |