Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாகம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் 2021 கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |