அல்லு அர்ஜுன் புஷ்பா பட டீசர் யூடியூபில் புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது.
மேலும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் புஷ்பா படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த டீசர் 20 லட்சம் லைக்குகளை பெற்று இதுவரை வெளியான டீசர்களில் அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.