புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் தற்போது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். இரு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், தனஞ்செய், ஜெகபதி பாபு, சுனில், அனசுயா பரத்வாஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாக உள்ளது.
Our fiercest #PushpaRaj's heart melts at the sight of his love ❤️
Meet @iamRashmika as #Srivalli 😍#SoulmateOfPushpa #PushpaTheRise #ThaggedheLe 🤙@alluarjun @aryasukku @ThisIsDSP @adityamusic @PushpaMovie pic.twitter.com/TFqIGaGGyF
— Mythri Movie Makers (@MythriOfficial) September 29, 2021
ஏற்கனவே இந்த படத்திலிருந்து அல்லு அர்ஜுன், பஹத் பாசில் ஆகியோரின் போஸ்டர்கள் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் கேரக்டர் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இவர் இந்த படத்தில் ஸ்ரீ வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது ராஷ்மிகாவின் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.