“புஷ்பா” திரைப்படம் 300 கோடி வசூலை தாண்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “புஷ்பா”. இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்தார். ஹீரோயினாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இத்திரைப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. இருப்பினும், வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.
இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 300 கோடி வசூலை தாண்டியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. புஷ்பா திரைப்படம் இதுவரை 365 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்செய்தியைக் கேட்ட அல்லு அர்ஜுன் ரசிகர்கள், மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.