Categories
Uncategorized

புஷ்பா 2 படத்தில் களம் இறங்கும் பிரபல நடிகை….. வெளியான வேற லெவல் அப்டேட்…..!!!!!

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. இவருக்கு கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகள் வருகின்றன. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது. இப்படத்தில் சாய் பல்லவி நடிப்புக்கு பாராட்டுக்களும் குவிந்தது. இந்நிலையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்ற புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் பழங்குடியின மக்கள் வேடத்தில் நடிக்க சாய் பல்லவியை படக்குழுவினர் அணுகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு சாய்பல்லவி நடித்த முந்தைய படங்களில் அழுத்தமான வேடங்களில் நடித்துள்ளதால் அவரிடம் பழங்குடி பெண்ணாக நடிக்க பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து புஷ்பா படத்தின் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தொடங்கியுள்ளன. மேலும் புஷ்பா படபடத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா, பகத்பாசில் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

Categories

Tech |