டிரைக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற வருடம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் “புஷ்பா”. இந்த படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூபாய் .350 கோடி வரை வசூலை ஈட்டியது.
இத்திரைப்படத்தின் 2ஆம் பாகமான “புஷ்பா-தி ரூல்” படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் பூஜையுடன் துவங்கியது. இந்த நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று பேங்காக்கில் பெரிய அளவில் படமாக்கப்பட இருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு நவம்பர் மாதம் 2வது வாரம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை அடுத்து 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.