நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியானது. இதில் பாகாத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உங்கள் அன்புக்கு நன்றி. இதுதான் எங்களை இன்னும் கடினமாக உழைக்க வைக்கிறது. புஷ்பா 2 படம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான புஷ்பா சுமார் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.