Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

4 டன் பூக்கள் ஏலம்… மல்லிப்பூ கிலோ 350 …. வியாபாரிகள் மகிழ்ச்சி..!!

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் மகிழ்ச்சியுடன் வியாபாரிகள் வாங்கி சென்றார்கள்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் நேற்று  அங்கு பூக்கள் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 4 டன் பூக்களை,  சத்தியமங்கலம் பகுதி  மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள  அனைத்து விவசாயிகளும் விற்பனைக்காக  கொண்டு வந்தார்கள். இதில் ஒரு கிலோ முல்லை  ரூபாய் 800 க்கும் , செண்டுமல்லி ஒரு கிலோ  30 க்கும் , பட்டு பூ 70 க்கும், ஜாதிமல்லி 600 க்கும், சம்பங்கி 40 க்கும் ,கனகாம்பரம் பூ 300 க்கும், செவ்வந்தி 130 க்கும், துளசி 50க்கும்,  மல்லிகைப்பூ 350 க்கும் ஏலம் விடப்பட்டது.

மக்கள் விரும்பி வாங்ககூடிய பூக்களில் ஒன்று மல்லி பூ, ஆனால் நேற்று அதிக விலை இல்லாமல் குறைந்த விலைக்கே ஏலம் போனது. இதனால் மக்கள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் பூக்களை வாங்கி சென்றனர்.  இந்நிலையில்  மார்க்கெட்டில் மல்லிகைப்பூ  வரத்து அதிகமாக உள்ளதால் குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டது என சங்க நிர்வாகிகள் கூறுகினார்கள்.

Categories

Tech |