Categories
மாநில செய்திகள்

பூக்கள் விலை கடும் உயர்வு….. இல்லத்தரசிகள் அதிர்ச்சி….. வியாபாரிகள் மகிழ்ச்சி….!!!!

ஆவணி மாதம் பிறப்பதை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தை தமிழ்நாடுக்கு மட்டுமல்ல கேரளாவுக்கும் புகழ்பெற்றது. இங்கு ஓசூர், மதுரை, திண்டுக்கல் மற்றும் பெங்களூர் என வெளியூர்களிலிருந்தும் உள்ளூர் பகுதிகளான குமாரபுரம், ஆரல் வாய்மொழி உள்ள பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் அதிக அளவில் பூக்கள் வரத்து இருக்கும் . கேரளா மாநிலம் மற்றும் நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களுக்கும் பூக்கள் மொத்தமாக இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

ஆவணி மாதம் பிறப்பதை முன்னிட்டு தோவாளைய மலர் சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 30 டன் பூக்கள் விற்பனை வந்துள்ளது. பூக்களின் தேவை அதிகரித்துள்ள காரணத்தினாலும் ஆவணி மாத பிறப்பை மிகச் சிறப்பாக கேரள மக்கள் கொண்டாடுவதாலும் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நேற்று கிலோ ஒன்றுக்கு 350 ரூபாய்க்கு மல்லிகை பூ விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 700 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.

அதேபோல் பிச்சிப்பூ 350 இலிருந்து 750 ரூபாயாகவும், மல்லிகை 900 ரூபாய் வரைக்கும் விற்பனையாகி வருகின்றது. சம்பங்கி 200 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும், ரோஜா 150 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகின்றது. வரும் நாட்களில் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்கள் வருவதால் பூக்களின் விலை மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |