மதுரையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை விவசாயிகள் வெளிப்படுத்தினர்.
மதுரை திருமங்கலம் அருகே அரசபட்டி, வலியகுலம், தும்பங்குலம், கப்பலூர், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் மல்லிகை, பிச்சி, முல்லைப் பூக்களை பயிரிட்டு உள்ளனர். சுபநிகழ்ச்சிகள் கோயில் விழாக்கள் நடைபெறாமல் இருப்பதால் ஏற்கனவே பூக்கள் விற்பனையாகாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிலோ 40 ரூபாய்க்கும் குறைவாக சந்தையில் விலைப்போனதால் விவசாயிகள் மேலும் வேதனை அடைந்துள்ளனர்.
தோட்டத்தில் பூக்களைப்பறிக்க கூலி வழங்க முடியாததால் செடிகளிலேயே பறிக்காமல் உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் உச்சகட்டமாக விரக்தியடைந்துள்ள விவசாயிகள் பூக்களை குப்பையில் கொட்டி தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்.