Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரொம்ப நஷ்டம் ஆகிருச்சு…. தொற்றினால் ஏற்பட்ட விளைவு… கோரிக்கை விடுத்த விவசாயிகள்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பூக்கள் விலை சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்க வேண்டி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம், செரியலூர், நகரம், கொத்தமங்கலம், அணவயல் மற்றும் வடகாடு உள்ளிட்ட  50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூந்தோட்டம் அமைத்து விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் விளையும் பூக்களை கீரமங்கலத்திலுள்ள கமிஷன் கடைகளில் விவசாயிகள் விற்பனை செய்வது வழக்கம். அந்த பூக்களை வெளியூர்களிலிருந்து மொத்தமாகவும் மற்றும் சில்லரையாகவும் வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம். ஒவ்வொரு நாளும் சுமார் 10 டன் வரை பூக்கள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பூக்களின் விலை சரிவை சந்தித்துள்ளது. இதுக்குறித்து விவசாயிகள் கூறும்போது கடன் வாங்கி பூக்கள் உற்பத்தி செய்துள்ளோம், ஆனால் தற்போது  பூக்கள் விலை குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மலர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |