காஞ்சிபுரத்தில் புரட்டாசி 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடும் நிலையில் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
இன்று புரட்டாசி மாதம் 4-வது வாரம் சனிக்கிழமை கொண்டாடுவதை ஒட்டி ஓசூர் கிருஷ்ணகிரியில் இருந்து சாமந்தி பூக்களை விவசாயிகள் காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் பூ மார்க்கெட்டிற்கு கொண்டு வந்திருந்தனர். பூக்கள் அதிக விளைச்சல் காரணமாக அதிக அளவில் காஞ்சிபுரம் பூ மார்க்கெட்டிற்க்கு வந்ததால் சாமந்தி பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்ற சாமந்திப்பூ இன்று ஒரே அடியாக கிலோ ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் தான் விற்பனை ஆனது.
சனிக்கிழமையான இன்று பூக்களின் விலை கூடுதலாக இருக்கும் என்று நம்பி வந்த பொதுமக்களுக்கு பூக்களின் விலை குறைவாக இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பூக்களை வாங்கி சென்றனர். சாமந்தி பூக்கள் விலை குறைவாக இருந்ததால் வாகன கண்டனத்திற்கு கூட விலை போகாததால் விவசாயிகளும், வியாபாரிகளும் வேதனை அடைந்தனர்.