Categories
உலக செய்திகள்

பூங்காவிற்கு சென்ற சிறுவன்…. காப்பாற்ற போராடிய தாய்…. பின் நேர்ந்த துயரம்…!!

சிறுவன் ஒருவன் ஒவ்வாமையினால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பிரிட்டனில் வசிக்கும் 12 வயதான சிறுவன் Cason Hollwood. இச்சிறுவன் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டுள்ளார். தன் தாய் மற்றும் சகோதரர்கள் மூவருடன் வசித்து வந்துள்ள இச்சிறுவன் உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதற்காக ஆர்வமாக இருந்துள்ளார். இதனைத்தொடர்ந்து Cason Hollwood கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தன் தாத்தா மற்றும் பாட்டியுடன் சேர்ந்து இரவு உணவை சாப்பிட்டுள்ளார். அதன்பின் சில மணி நேரங்களுக்கு பிறகு அருகில் உள்ள பூங்காவிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற Cason Hollwood சிறிது நேரத்திலேயே பூங்காவில் சுருண்டு விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளதாக தன் தாயை தொடர்பு கொண்டுள்ளார்.

இதனால் அவரின் தாயார் உடனடியாக ஆஸ்துமாவிற்கான நிவாரண பொருட்களுடன் அந்த பூங்காவிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று உடனடியாக Cason ஐ Crewe ல் உள்ள leighton என்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் Cason அம்மாவின் செல்லம் என்பதால் அவர் தாயின் அரவணைப்பிலேயே தான் இருந்துள்ளார். மேலும் இதுகுறித்து மருத்துவர்கள் கூறியுள்ளதாவது ஒரு வகையிலான ஒவ்வாமையினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனின் உடல் கூறு ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்பு தான் தெளிவான காரணம் தெரியவரும் என்றும்  மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |