சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் கண்முன்னே பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்து குதறும் காட்சி வெளியாகியுள்ளது.
சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில் விலங்குகள் அனைத்தும் சுதந்திரமாக நடமாடுவதை அங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவாறு பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில், கரடிகள் கூட்டம் அந்தப் பூங்காவின் காப்பாளர் கொன்று சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
ஆனால் சீனாவின் சமூக ஊடகங்களில் ஒரு மனிதரை கரடிகள் அனைத்தும் கடித்து குதறுவதையும், வாகனம் ஒன்றில் பயணிக்கும் பார்வையாளர்கள் அதனைக் கண்டு பதறும் அதையும் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. அந்தக் கொடூர சம்பவத்தால் பூங்காவின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது.