Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பூசாரியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்கள்…. கோர்ட்டில் சரணடைந்த வாலிபர்…. நெல்லையில் நடந்த சம்பவம்….!!

நெல்லையில் கொலை வழக்கு தொடர்பாக வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் சுடலை மாடசுவாமி கோவிலுக்கு பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் கடந்த 18 ஆம் நாளன்று வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை கைது செய்ய, மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் 15 நபர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வந்த முருகேசன் என்ற வாலிபர் நாங்குநேரியிலிருக்கும் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார்.

Categories

Tech |