திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது என பாஜகவை கடுமையாக முக.ஸ்டாலின் சாடியுள்ளார்.
சமூகநீதி காத்து சமத்துவ கல்வி வளர்ப்போம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார். அதில், எழுத்துப் பூர்வமாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போல பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கருத்து சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் வகையில் காஷ்மீர் முதல் கடைக்கோடி தமிழகம் வரை கைது நடவடிக்கைகள். இதர பிற்படுத்தப்பட்டோரின் கல்வி உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றது திமுக. அகில இந்திய மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற எந்த தடையும் இல்லை என தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். சமூகநீதிக்கான போர்க்களத்தில் சற்றும் சளைக்காமல் போரிடும் திமுக, இம்முறையும் சட்டரீதியான வெற்றியை ஈட்டி இருக்கிறது.
அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது மத்திய பாஜக அரசு. புதிய கல்விக்கொள்கை உண்மையில் பழைய மனுதர்ம ஒடுக்குமுறை மீதான பளபளப்பு மிக்க வண்ணப்பூச்சு. அனைவருக்கும் சமமான கல்வி என்பதற்கு நூற்றாண்டுகால மாடல் நம் தமிழ்நாடு தான். திமுகவை பூச்சாண்டி தங்களால் எவராலும் எதுவும் செய்துவிடமுடியாது. தமிழ் மக்களையும் திசை திருப்ப முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.