தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்ததையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தி வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் அவருடைய அலுவலகங்களில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்று இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள், சொகுசு கார்கள், சொகுசு பேருந்துகள், தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடத்துவதாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக தலைமை கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. அந்த வகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு விட்டு அச்சுறுத்தும் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு அதிமுகவினர் ஒருபோதும் பயப்படப்போவதில்லை. எல்கேஜி படிக்கும் போதே அச்சுறுத்தல்களை சந்தித்து விட்டோம். இப்போது அச்சுறுத்தல்களை எதிர்ப்பதில் டபுள் டாக்டரேட் முடித்துவிட்டோம்” என்று கூறியுள்ளார்.